கீழக்கரை கடற்கரை வழியாக இலங்கைக்கு போதை பொருள் கடத்த இருப்பதாக ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து நேற்று முதல் ராமநாதபுரம்- கீழக்கரை சாலையில் அதிகாரிகள் வாகன சோதனை மற்றும் கடலோர பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளத. இந்நிலையில் கீழக்கரை பேருந்து நிலையத்திலிருந்து கடற்கரை செல்லும் வழியில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் சுங்கத்துறை அதிகாரிகளை கண்டதும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றதால் சந்தேகம் அடைந்த சுங்கத்துறையி னர் அவர்களை மடக்கி பிடிக்க முயன்ற போது அவர்கள் கையில் வைத்திருந்த பார்சல் ஒன்றை சாலையில் வீசி விட்டு தப்பிச் சென்றனர்.
இதையடுத்து அந்த பார்சலை கைப்பற்றி சோதனை செய்த போது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்ததையடுத்து ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து வந்து எடையிட்டு பார்த்தபோது அதில் 40 கிலோ உயர் ரக கஞ்சா இருந்ததுள்ளது.
இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிய இருவரை அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள ரூ.40 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.