தமிழ்நாடு

சீனப்பட்டாசுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை - சுங்கத்துறை

சீனப்பட்டாசுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை - சுங்கத்துறை

jagadeesh

ஆபத்தை விளைவிக்கும் சீனப்பட்டாசுகளை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

சுங்கத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சீனப்பட்டாசுகளை சட்டவிரோதமாக கொள்முதல் செய்வது, விற்பனை செய்வது போன்றவை 1962 ஆம் ஆண்டு சுங்கத்துறை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சீனப்பட்டாசுகள் மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய பொருள்களை உள்ளடக்கியவையாக உள்ளன என்றும், இத்தகைய பட்டாசுகளை வாங்குவதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனப்பட்டாசுகளை பதுக்கி வைக்கப்பட்டிருப்பது குறித்தோ, விற்பனை செய்வது குறித்தோ தெரியவந்தால் பொதுமக்கள் தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்குமாறும் சென்னை சுங்கத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.