தமிழ்நாடு

ஊரடங்கு தீவிரம்: தேவையின்றி வெளியே சுற்றுவோருக்கு காவல்துறையினர் அபராதம்

ஊரடங்கு தீவிரம்: தேவையின்றி வெளியே சுற்றுவோருக்கு காவல்துறையினர் அபராதம்

Veeramani

ஊரடங்கையொட்டி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னையில் தேவையின்றி வெளியே சுற்றுவோருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துவருகிறார்கள்.

தமிழ்நாட்டில் வரும் 24 ஆம்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளநிலையில், இன்று முதல் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை அண்ணாசாலையில் தேவையின்றி வெளியே சுற்றும் வாகன ஒட்டிகளுக்கு போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதித்து வருகின்றனர். சென்னை திருவல்லிக்கேணி கடைவீதியான ஜாம்பஜார் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயினும், ஐஸ்அவுஸிலிருந்து ராயப்பேட்டை செல்லும் சாலையில் ரம்ஜான் பண்டிகையொட்டி காய்கறி கடை, இறைச்சி கடைகள் மற்றும் பிரியாணி கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

ஜி.எஸ்.டி சாலையில் ஆலந்தூர், குரோம்பேட்டை, நங்கநல்லூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் சாவடிகள் அமைத்து தேவையின்றி சுற்றி திரிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். காவல்துறையினரின் கண்காணிப்பால் சாலையில் வாகன ஓட்டிகளின் வரத்து சற்று குறைவாக காணப்பட்டது.