தமிழ்நாடு

‘துண்டு துண்டாக கிடந்த சடலம்’: இளைய மகனுடன் சேர்ந்து மூத்த மகனை கொன்ற தாய்..!

‘துண்டு துண்டாக கிடந்த சடலம்’: இளைய மகனுடன் சேர்ந்து மூத்த மகனை கொன்ற தாய்..!

webteam

கம்பம் அருகே தனது இளைய மகனும் தாயும் சேர்ந்து மூத்த மகனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், கம்பம், தொட்டமாந்துறை ஆற்றுப்பகுதியில் நேற்றிரவு தலை, கை , கால்கள் துண்டிக்கப்பட்டு அடையாளம் தெரியாத வகையில் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த கம்பம் போலிசார், விரைந்து சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது அப்பகுதியில் இருந்த சிசிடிவி மூலம் கொலை செய்தவரின் வாகன எண்ணை வைத்து கொலையாளிகளை பிடித்தனர். விசாரணையில் கம்பம் மருவரசி மஹால் 15 வது வார்டை சேர்ந்த செல்வி என்பவர் தனது இரண்டாவது மகன் பாரத்துடன் சேர்ந்து, மூத்த மகன் விக்னேஸை வீட்டில் வைத்து கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், “விக்னேஷ் கஞ்சா போன்ற தீய பழக்கத்திற்கு அடிமையாகி வீட்டில் அடிக்கடி தொந்தரவு செய்து வந்தான். ஆத்திரத்தில் கொலை செய்து விட்டோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் கொலைசெய்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வெவ்வேறு இடங்களில் வீசப்பட்ட தலை, கை, கால்களை தேடும் பணியில் போலிசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.