தமிழ்நாடு

கம்பம்: இரட்டை மாட்டுவண்டி பந்தயம்: தடதடவென ஓடி பரிசை தட்டிச்சென்ற மாடுகள்

கம்பம்: இரட்டை மாட்டுவண்டி பந்தயம்: தடதடவென ஓடி பரிசை தட்டிச்சென்ற மாடுகள்

kaleelrahman

கம்பத்தில் நடைபெற்ற இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயத்தில் 100-க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கெண்டு சீறிப்பாய்ந்தன.

தேனி மாவட்டம் கம்பம் பகவதியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 62வது ஆண்டு இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த இரட்டை மாட்டுவண்டி பந்தயத்தை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாடுகள் மற்றும் வண்டி சாரதிகள் கலந்து கொண்டன. இந்த மாபெரும் மாட்டு வண்டி பந்தையம் தேன்சிட்டு, பூஞ்சிட்டு, நடுமாடு, கரிச்சான்மாடு, பெரியமாடு என 5 வகையான பிரிவுகளில் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

இந்த இரட்டை மாட்டுவண்டி பந்தயத்தை சாலையில் இருபுறங்களில் நின்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர்.