பேருந்து மீது லாரி மோதிய விபத்து pt desk
தமிழ்நாடு

கடலூர் | கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த பேருந்து மீது லாரி மோதிய விபத்து – ஒருவர் பலி, 27 பேர் காயம்

திட்டக்குடி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புக் கட்டையில் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 27 பேர் படுகாயமடைந்தனர்.

PT WEB

செய்தியாளர்: கே.ஆர்.ராஜா

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் பகுதியில் உள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சென்னையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி 57 பயணிகளுடன் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த போருந்து வெங்கனூர் ஓடை குறுகிய பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதி சாலையின் குறுக்கே கவிழ்ந்தது. அப்போது பின்னால் வந்த லாரி பேருந்து மீது மோதியுள்ளது.

பேருந்து மீது லாரி மோதிய விபத்து

இதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், 27 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க வந்த வேப்பூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் ராமநத்தம் காவல் துறையினர் ஆகியோர் ஒரு மணி நேரம் போராடி காயமடைந்தவர்களை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனை மற்றும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதன் காரணமாக அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 5 கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.