தமிழ்நாடு

கடலூர்: திமுக, அதிமுகவினரிடையே கடும் மோதல்- உருட்டுக்கட்டைகளால் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு

கடலூர்: திமுக, அதிமுகவினரிடையே கடும் மோதல்- உருட்டுக்கட்டைகளால் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு

kaleelrahman

கடலூரில் திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. உருட்டுக் கட்டைகளால் இருதரப்பினரும் தாக்கிக் கொண்டதில் ஆறுபேர் காயமடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் உள்ளேறிப்பட்டு கிராமத்தில் திமுக மற்றும் அதிமுகவினரிடையே இன்று மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலுக்காக சொல்லப்படும் காரணம், இன்று காலை திமுகவினர் அந்த பகுதியில் உள்ள சாலையோரங்களில் ப்ளிசிங் பவுடரை கொட்டியிருக்கிறார்கள். அப்போது அந்த ப்ளிசிங் பவுடர் அதிமுக பிரமுகர் மீது பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், ஒருகட்டத்தில் இரண்டு தரப்பினரிடையே மோதலாக மாறியுள்ளது. இதனால் இருதரப்பினரும் உருட்டு கட்டைகளை கொண்டுவந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில், படுகாயமடைந்த 6 பேர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சை பெற்றிருக்கிறார்கள்.