தேரோட்டம் pt desk
தமிழ்நாடு

கடலூர் | பெருமாத்தூர் வெற்றி வேலாயுத சுவாமி ஆலய தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

புவனகிரி அருகே பெருமாத்தூர் வெற்றி வேலாயுத சுவாமி ஆலய கிருத்திகை திருத்தேர் உற்சவம் விமர்சியாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

PT WEB

செய்தியாளர்: ஆர்.மோகன்

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பெருமாத்தூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வெற்றி வேலாயுத சுவாமி ஆலயத்தில் முருகருக்கு உகந்த நாளாம் கிருத்திகை தினத்தை முன்னிட்டு ஆலயத்தில் திருத்தேர் உற்சவம் விமர்சியாக நடைபெற்றது. வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ வெற்றி வேலாயுத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் காட்சியளித்தார்.

இதையடுத்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்து பிரசாதம் பெற்றுச் சென்றனர்.