ஒழுங்குமுறை விற்பனை கூடம்
ஒழுங்குமுறை விற்பனை கூடம் PT
தமிழ்நாடு

“விற்ற பொருட்களுக்கு பணம் கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம்” - வேதனையில் கடலூர் விவசாயிகள்!

PT WEB

கடலூர் மாவட்டத்தில் 15 நாட்களுக்கு முன் கொள்முதல் செய்யப்பட்ட விளைபொருட்களுக்கு, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் தற்போது வரை பணம் வழங்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உளுந்து, நெல், மணிலா, எள், பச்சைப்பயிறு, மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு விளைப்பொருட்களை விவசாயிகள் விற்பனை செய்துள்ளனர். பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு 15 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை பணம் வழங்கப்படவில்லை எனவும், பணம் கேட்டுச் சென்றாலும் அதிகாரிகள் தங்களை அலைகழிக்க வைப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள், “விற்ற பொருட்களுக்கு பணம் கிடைக்காமல் நாங்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறோம்” எனக் குமுறுகின்றனர்.

இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர், ”தனியார் வங்கியின் இணைய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.