விநோத முறையில் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் முகமூடிக் கொள்ளையன் கனரா வங்கி ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடிக்க முயலும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அக்டோபர் 29ஆம் தேதி அதிகாலை முகமூடி அணிந்து வந்த நபர் ஏடிஎம் இயந்திரத்தை இரும்பு கம்பியால் உடைத்துள்ளார். எனினும் பணமிருந்த லாக்கரை அவரால் உடைக்க முடியவில்லை.
இதனையடுத்து காவல்துறையின் மோப்ப நாய் தம்மை கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக மிளகாய்ப் பொடியை தூவிவிட்டு அந்த நபர் தப்பிவிட்டார். இதன் காரணமாக லாக்கரில் இருந்த 26 லட்சம் ரூபாய் தப்பியது. கொள்ளையனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.