தமிழ்நாடு

பறவையை கொன்று முகநூலில் லைக் வாங்க நினைத்தவர் கைது

பறவையை கொன்று முகநூலில் லைக் வாங்க நினைத்தவர் கைது

webteam

ப‌றவைகளை கொன்று சமைக்கும் காட்சியை முகநூலில் பதிவிட்டு லைக் வாங்க நினைதவரை கடலூர் ‌வனத்துறையினர் கைது செய்தனர். 

பருவ மழை ஓய்ந்த நிலையில் ப‌றவைகள் கடலூர் மாவட்டம் வாலாஜ ஏரியில் உணவுக்கு வந்த பறவைகளை ‌சில இளைஞர்கள் கொன்று சமைக்க தயாரான காட்சி‌யை முகநூலில் பதிவிட்ட‌னர். இதை‌ பார்த்த டெல்லி‌ வன பாதுகாப்பு மையத்தினர் கடலூர் வனத்த‌றையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் வடலூர் பகுதியை‌ சேர்ந்த கதி‌ரவனும், ஸ்டீபனும் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. 

பின்னர் பறவைகளை கொன்ற குற்றத்திற்காக வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கதிரவன் கைது செய்யப்பட்டார். மேலும் தலைமறைவாகியுள்ள ஸ்டீபன் என்பவரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.  இனப்பெருக்கத்திற்க்கு வரும் பறவைகளை இறைச்சிக்காக பயன்படுத்தகூடாது, அதனை வேட்டையாடகூடாது என்று சட்டம் இருந்தும் சிலர் பறவைகளை வேட்டையாடி லைக் வாங்குவதற்காக முகநூலில் போட்டு இருப்பது சுற்று சூழல் ஆர்வலர்களை கவலை அடைய செய்துள்ளது.