Road accident pt desk
தமிழ்நாடு

கடலூர்: இருவேறு சாலை விபத்துகளில் 5 பேர் உயிரிழப்பு - காயங்களுடன் 17 பேர் மருத்துவமனையில் அனுமதி

கடலூர் மாவட்டத்தில் நடந்த இரண்டு சாலை விபத்துகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 17 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

webteam

கடலூர் மாவட்டத்தில் மனம்தவிழ்ந்த புத்தூர் அருகே பண்ருட்டி - அரசூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேர் மீது லாரி ஒன்று வேகமாக சென்று மோதி உள்ளது. இதில், கோகுல், பாரதி, லோகு ஆகிய மூன்று பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

Road accident

இதேபோல், கடலூர் மாவட்டத்திலேயே பரவலூர் - கோமங்கலம் சாலையில், இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி ஒன்று, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பிரதீப் ராஜ், மணிமாறன் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து செய்தியை அறிந்து, அப்பகுதி மக்கள் அந்த இடத்தில் அதிக அளவில் கூடினர். அப்போது வேப்பூர் பகுதியில் இருந்து வந்த கார் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் 17 பேர் படுகாயமடைந்தனர். பின், நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.