தமிழ்நாடு

கடலூர்: மனைவி வாங்கிய கடனை அடைக்க திருடனாக மாறிய கணவர்!

கடலூர்: மனைவி வாங்கிய கடனை அடைக்க திருடனாக மாறிய கணவர்!

webteam

கடலூர் செல்லங்குப்பம் அருகே மனைவி வாங்கிய கடனை அடைக்க பகல் நேரத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டு அது போதாது எனக்கூறி இரவு நேரத்தில் திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை கடலூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், செல்லங்குப்பம் பகுதியில் இரும்புக்கடை ஒன்றில் இரவு நேரத்தில் நுழைந்த திருடன் ஒருவர் ஒய்யாரமாக கால் மேல் கால் போட்டுக்கொண்டு பணத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பி இருந்தது. இந்நிலையில் திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் சேடப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமு என்பவரைக் கைது செய்தனர்.

அவரிடன் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது மனைவி வாங்கிய கடனை அடைக்க இரவில் திருடனாக மாறியதாக வழக்கில் கைது செய்யப்பட்ட ராமு காவல்துறையில் விசாரணையில் தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு தொழில்கள் செய்தும் லாபம் கிடைக்காததால் திருடனாக மாறிவிட்டதாக கூறியுள்ளார். திருடியதை ஒப்புக்கொண்டதை அடுத்து, முதுநகர் போலீசார் ராமு மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.