நாளை முதல் ஒருவார காலத்திற்கு தளர்வின்றி ஊரடங்கு அறிவிக்கபட்டதால் சென்னையில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் மக்கள் குவிந்தனர்.
கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவடங்களில் பொது மக்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர். இதனை கட்டு படுத்தும் விதமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 10ம் தேதி முதல் 24ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கை அறிவித்தார்.
ஆனால் தொடர்ந்து நோய் தொற்று பாதிப்பு குறையாத காரணத்தால் நாளை முதல் மீண்டும் ஒருவார காலம் எவ்வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இன்று ஒருநாள் மட்டும் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தனியார் மற்றும் அரசு பேருந்துகள் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், மதுரை, கோயம்புத்தூர் போன்ற 8 மண்டலங்களுக்கு இன்று பேருந்துகள் இயக்கபட்டன.
இதனால் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் படையெடுக்க தொடங்கியதால் கூட்ட நெரிசல் காணப்பட்டது. இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.