தமிழ்நாடு

கன்னியாகுமரி: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

கன்னியாகுமரி: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

கலிலுல்லா

பெண்களின் சபரிமலை என்று அழைக்கபடும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில்  புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. 

ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கத்தில் புத்தாண்டு விடுமுறை நாட்களில் குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் 31,1,2 ஆகிய தேதிகளில் சுற்றுலா பயணிகள் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் புத்தாண்டை கொண்டாட குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் அனுமதி மறுக்கப்பட்டது.

ஆனால் இந்து மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் உட்பட தேவாலயங்களில் பக்தர்கள் செல்ல எந்த விதமான தடையும் இல்லை. இன்று அதிகாலையில் இருந்தே மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெண்களின் சபரிமலை என்று அழைக்கபடும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில்  புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.கொரோனா விதிமுறைமுறைக்கு கட்டுப்பட்டு வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.