Crocodile pt desk
தமிழ்நாடு

சிதம்பரம்: வீட்டில் பதுங்கியிருந்த 8 அடி நீள முதலை - பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

சிதம்பரம் அருகே வீட்டில் பதுங்கி இருந்த 8 அடி நீளமும் 110 கிலோ எடையும் கொண்ட முதலையை பாதுகாப்பாக மீட்ட வனத்துறையினர், அதை ஏரியில் விட்டனர்.

webteam

செய்தியாளர்: ஆர்.மோகன்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நாஞ்சலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்ரஷீத். இவர், இன்று அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது வீட்டின் முன் பகுதியில் சுமார் 8 அடி நீளமும் 110 கிலோ எடையும் கொண்ட முதலை ஒன்று இருந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக சிதம்பரம் வனத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

forest dept

தகவலின் பெயரில் விரைந்து சென்ற வனத் துறையினர் கிராம மக்கள் உதவியுடன் முதலையை பத்திரமாக அங்கிருந்து மீட்டு, வக்காரமரி ஏரியில் முதலையை பாதுகாப்பாக விட்டனர், வீட்டிற்குள் அதிகாலையில் முதலை இருந்த சம்பவம் நாஞ்சலூர் கிராம பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.