தமிழ்நாடு

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு நடைபயணம் - கேரள இளைஞருக்கு வரவேற்பு

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு நடைபயணம் - கேரள இளைஞருக்கு வரவேற்பு

kaleelrahman

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நடைபயணமாக வந்த கேரளா இளைஞருக்கு தருமபுரியில் காவல் துறையினர் வரவேற்பு அளித்தனர்.

கேரள மாநிலம் கோட்டையத்தைச் சேர்ந்த விமல் என்ற இளைஞர் நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுப்பதற்கு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் செல்கிறார். இந்த நடைபயணத்தை கடந்த 1 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.

இந்நிலையில், இன்று தருமபுரி மாவட்டத்திற்கு வந்த இளைஞர் விமலை, தருமபுரி நான்கு ரோடு சந்திப்பில் நகர காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவல் துறையினர் சிறப்பான வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, சிறு குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு, குழந்தை தொழிலாளர், இளம் வயது திருமணம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை எவ்வாறு கண்டறிதல், அவற்றை எவ்வாறு எதிர்கொள்ளுதல் என்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கேரள இளைஞர் வழங்கினார்.