தமிழ்நாடு

காளைகளுக்கு தகுதிச்சான்று.... தீவிரமடைந்த ஜல்லிக்கட்டு விழா

காளைகளுக்கு தகுதிச்சான்று.... தீவிரமடைந்த ஜல்லிக்கட்டு விழா

webteam

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்காக காளைகளுக்கு தகுதிச்சான்று வழங்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

ஜல்லிக்கட்டு போட்டிகள் மீதான தடையால் கடந்த 3 ஆண்டுகளாக போட்டிகள் நடைபெறாமல் காளை வளர்ப்போர் ஏமாற்றம் அடைந்திருந்த நிலையில், தற்போது ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தடை நீங்கியுள்ளது. இதையடுத்து பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுக்கான ஆயத்தங்கள் தொடங்கியுள்ளன. பிரசித்திபெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தங்கள் காளைகளை பங்கேற்க வைக்க, அவனியாபுரம் சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த காளை வளர்ப்போர் தங்கள் காளைகளை அவனியாபுரம் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துவந்திருந்தனர்.

மேலும் இந்த கால்நடை மருத்துவமனையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் இன்று தொடங்கி வரும் 4 ஆம் தேதிவரை கால்நடைத்துறை முன்ப‌திவு கூப்பன் வழங்கப்படுகிறது.