போக்சோ சட்டம் - நீதிமன்றம் web
தமிழ்நாடு

'போக்சோ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்..' அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

போக்சோ சட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், தொலைக்காட்சி, பத்திரிகை வாயிலாக விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

PT WEB

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, போக்சோ சட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள் மூலம் விளம்பரம் செய்யவும், அரசு பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போக்சோ சட்டம் குறித்து பொதுமக்கள், குழந்தைகள், பெற்றோர்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. போக்சோ வழக்கில் நாகர்கோவில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் விதித்த 25 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து, இளைஞர் ஒருவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மாலா, பாதிக்கப்பட்ட பெண்ணின் வயது நிரூபிக்கப்படாததால் இளைஞருக்குக் கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.

POCSO

மேலும், போக்சோ சட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள் மூலம் பரவலாக விளம்பரம் செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு பள்ளி, கல்லூரிகளில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும். இந்த உத்தரவுகளை நிறைவேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசின் முதன்மை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன் 3ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.