தமிழ்நாடு

24வது நாளாக போராடும் பட்டாசு தொழிலாளர்கள்: வாழ்வாதாரம்?

24வது நாளாக போராடும் பட்டாசு தொழிலாளர்கள்: வாழ்வாதாரம்?

webteam

சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர் தொடர்ந்து 24வது நாளாக காலம்வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நூறாண்டுகளை கடந்து நடக்கும் பட்டாசு தொழிலில் ஆண்டுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது. இந்நிலையில் கடந்த 24 நாட்களாக பட்டாசு தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் இத்தொழிலை நம்பி அச்சகம், காகித அட்டை தயாரிப்பு, காகித குழாய் தயாரிப்பு, கட்டிங், ஸ்கோரிங், பன்ச்சிங் உள்ளிட்ட 106 சார்பு தொழில்கள் நடந்துவருகின்றன.

இந்த போராட்டத்தின் மூலம், மத்திய அரசு பட்டாசுக்கு சுற்றுப்புறச் சூழல் விதிகளிலிருந்து விலக்களித்து, சுற்றுச்சூழல் விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வந்து பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த போராட்டத்தால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுமார் 950 பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு, 4 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இதுவரை ரூ.345 கோடி பட்டாசு வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது.