தமிழ்நாடு

சிவகாசியில் ‌7ஆவது நாளா‌க பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்

சிவகாசியில் ‌7ஆவது நாளா‌க பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்

webteam

சுற்றுப்புறச்சூழல் விதிகளிலிருந்து பட்டாசுக்கு விலக்களிக்கக் கோரி சிவகாசியில் 7ஆவது நாளாக பட்டாசு உற்பத்தியாளர்கள் இன்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்தியா முழுவதும் பட்டாசுக்கு தடைவிதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது. இதனால் பட்டாசுக்கு தடை விதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் வெளிமாநில விற்பனையார்கள் ஆர்டர்களை நிறுத்தியுள்ளனர். அதனால், பட்டாசு ஆலை முடங்குவதாகக் கூறி, கடந்த 26ஆம் தேதி முதல் பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். 9‌ கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு தொழிலையும், அதன் தொழிலாளர்களையும் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.