சென்னையில் பட்டாசு வெடிக்கும்போது ஏற்பட்ட விபத்துகளில் காயம் அடைந்த 15 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு முறை தீபாவளி கொண்டாட்டத்தின் போதும், விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டமாக இருக்க வேண்டும் என்றே பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும் தீபாவளி கொண்டாட்டம் என்றாலே விபத்தும் தவிர்க்க முடியாத ஒன்று என்ற நிலை வந்துவிட்டது. சென்னையில் பட்டாசு வெடிக்கும்போது ஏற்பட்ட விபத்துகளில் காயம் அடைந்த 15 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கும் தீக்காயங்கள் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த ஆண்டை காட்டிலும் குறைவு என்ற போதிலும், பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் விபத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
இதனிடையே சிவகாசியில், பட்டாசு வெடிக்கும்போது ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த 6-வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.