தமிழ்நாடு

போகிற இடத்திலாவது விசுவசமாக இருங்கள்: நிர்மலாவுக்கு சி.ஆர்.சரஸ்வதி அறிவுரை

போகிற இடத்திலாவது விசுவசமாக இருங்கள்: நிர்மலாவுக்கு சி.ஆர்.சரஸ்வதி அறிவுரை

webteam

ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவிக்க இருப்பதாக அறிவித்த நிர்மலா பெரியசாமிக்கு, சசிகலா அணியில் உள்ள சி.ஆர்.சரஸ்வதி அறிவுரை கூறியிருக்கிறார்.

அதிமுகவின் பேச்சாளர்கள் கூட்டத்தில் மோதல் ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் தொலைபேசி வாயிலாகப் பேசிய நிர்மலா பெரியசாமி, சொந்தத் தொகுதியைக் கூடத் தக்கவைக்கத் தெரியாதவர்தான் முன்னாள் அமைச்சர் வளர்மதி என்று பேசினார். மேலும், போலி அரசியல்வாதிகளிடமிருந்து நாட்டைக் காக்கவே ஓபிஎஸ் அணியில் இணையப் போவதாகவும் கூறியிருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த சி.ஆர்.சரஸ்வதி, நிர்மலா பெரியசாமி போகிற இடத்திலாவது விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.