தமிழ்நாடு

தமிழகத்தில் இரண்டாவது நாளாக 2,000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இரண்டாவது நாளாக 2,000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு

rajakannan

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாவது நாளாக இரண்டாயிரத்தை தாண்டியது. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 13ஆயிரத்தைக் கடந்தது.

தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாயிரத்து 181 பேர் புதிதாக நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 833 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 188 பேரும், கோவையில் 180 பேரும், தஞ்சாவூரில் 108 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 79 ஆயிரத்து 473 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 270 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 53 ஆயிரத்து 733 ஆக உள்ளது. ஒரே நாளில் 11 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 670 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஒரேநாளில் 68,020 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடி 19 லட்சத்து 71 ஆயிரத்து 624 ஆக இருந்த கொரோனா பாதிப்பு ஒரு கோடியே 20 லட்சத்து 39 ஆயிரத்து 844 ஆக உயர்ந்துள்ளது.