காஞ்சிபுரம் அருகே கொரோனா மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் திடீரென சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாங்காடு மருத்துவக்கல்லூரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சுடுதண்ணீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை எனக்கூறி தனிமைப்படுத்தப்பட்ட 50 க்கும் மேற்பட்டோர் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சமூக இடைவெளியுடன் போராட்டத்தில் ஈடுபடும் அவர்கள் அடிப்படை வசதி செய்து தராமல் உள்ளே செல்ல மாட்டோம் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த மாங்காடு காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.