தமிழ்நாடு

மதுரை: மேலும் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி

மதுரை: மேலும் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி

webteam

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக 8 மாதங்களாக கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி கல்லூரிகள் கட்டுப்பாடுகளுடன் திறக்க அரசு அனுமதித்த நிலையில் சென்னை ஐஐடியில் உள்ள மாணவர்கள் 190 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் முதலாமாண்டு மாணவர் ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த மாணவர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே அவருடன் விடுதியில் அறையில் தங்கி இருந்த மாணவர்கள் மற்றும் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரனோ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது மேலும் ஒரு கல்லூரி மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.