தமிழ்நாடு

தமிழக அரசுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வேண்டுகோள்

தமிழக அரசுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வேண்டுகோள்

jagadeesh

கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான காலக்கட்டத்தில் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்களுக்கு நோய்த்தொற்று கண்டறியும் சிறப்புப் பரிசோதனை முகாமை தமிழக அரசு நடத்த வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சென்னையில் பத்திரிகையாளர்கள் இருவருக்கு நோய்தொற்று கண்டறியப்பட்டதாக வந்திருக்கும் செய்திகள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கொரோனோ காலக்கட்டத்தில் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியும் சிறப்பு பரிசோதனை முகாமை தமிழக அரசு நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசும், அரசியல் கட்சியினரும் நேரடி செய்தியாளர் சந்திப்புகளை தவிர்க்க வேண்டும் என்றும், அவ்வாறு தவிர்க்காவிடில் பத்தரிகையாளர் நலன் கருதி ஊடக நிறுவனங்கள் உறுதியாக முடிவெடுக்க வேண்டும் என்றும் பத்திரிகையாளர் மன்றம் தெரிவித்துள்ளது.