அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் விற்கும் பயன்படுத்தப்பட்ட போன்களை மொத்தமாக வாங்கி அதன்மூலம் கோவையில் இருந்து தொழில் செய்து வருகின்றனர்.
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் ஆகிய ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் பலரும் செல்போன்களை வாங்குகின்றனர். இவ்வாறு வாங்கப்படும் போன்களில் பல எக்ஸ்சேஞ்ஜ் ஆஃபர் மூலம் மாற்றப்படுகின்றன. அத்துடன் புதிய போன்கள் தொழில்நுட்பக் கோளாறுகள் உள்ளிட்ட சில காரணங்களால் மாற்றப்படுகின்றன.
இவ்வாறு பயன்படுத்தப்பட்டு திருப்பி கொடுக்கப்பட்ட போன்களை அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள் மொத்தமாக ஆஃபரில் விற்கின்றன.
இதை அறிந்த கோவை இளைஞர்களான ஆஷிக் மற்றும் பிரகாஷ், போன்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். இந்தத் தொழிலில் ஆரம்பத்தில் நஷ்டம் ஏற்பட்டாலும், தொடர்ந்து முயற்சித்து தற்போது லாபகரமான தொழிலாக செய்து வருகின்றனர். இவர்களிடம் உள்ளூர், தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும் போன்களை வாங்குகின்றனர்.