பைக்ஆட்டோ மீது மோதிய விபத்து pt desk
தமிழ்நாடு

கோவை | ஒரே பைக்கில் வந்த நான்கு பேர் - ஆட்டோ மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

மேட்டுப்பாளையம் அருகே ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதிய கோர விபத்தில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், காயமடைந்த ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: இரா.சரவணபாபு

மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை பகுதியைச் சேர்ந்த நிஜு (22), விதுன் (16), நகுலன (17), மற்றும் வினித் ஆகிய நான்கு பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வேகமாக வநதுள்ளனர். அப்போது எதிரே வந்த பயணியர் ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், நிஜு, விதுன் மற்றும் நகுலன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

accident

பலத்த காயமடைந்த வினித், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை முடிந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் இவ்விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் லிங்கேஸ்வரன் (32), ஆட்டோவில் பயணித்த பெட்டம்மாள் (40), பூவிதா (25), சௌந்தர்யா (25), மங்கம்மாள் (75) ஆகியோர் காயங்களுடன் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போக்குவரத்து விதிகளை மீறி இருவர் பயணிக்கும் இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் வந்தது இந்த கோர விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.