காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் சக்தி சேனா அமைப்பினர் இரண்டு நாய்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்து முன்னணி, பஜ்ரங் தள் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். சில அமைப்புகள் கையில் தாலியுடன் சென்று காதலர்களை திருமணம் செய்து கொள்ளுபடி கட்டாயப்படுத்துகிறார்கள். சில அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டு காதலர்கள் மீது தாக்குதல்களும் நடத்துகின்றனர்.
இந்நிலையில் இந்து அமைப்புகளுள் ஒன்றான சக்தி சேனா காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாய்களுக்கு திருமண செய்து வைத்துள்ளனர். கோவையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இரண்டு நாய்களுக்கு மாலை அணிவித்து, அவற்றுக்கு இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளனர். இந்த நிகழ்வுக்கு விலங்கு நலவாரியத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.