தமிழ்நாடு

பொறியாளர் ரகு மரணம்: டிச.1ல் உயர்நீதிமன்றம் விசாரணை

பொறியாளர் ரகு மரணம்: டிச.1ல் உயர்நீதிமன்றம் விசாரணை

webteam

கோவையில் பொறியாளர் ரகு மரணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கோவையில் அதிமுக பேனரில் மோதி பொறியாளர் ரகு உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் எம்.எல்.ஏ கார்த்திக் சார்பில் வழக்கறிஞர் நீலகண்டன் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். பேனர்கள் குறித்த நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீலகண்டன் கோரிக்கை விடுத்தார். வழக்கறிஞரின் முறையீட்டை அவசரமாக விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் இந்த வழக்கு வருகின்ற வெள்ளிக்கிழமை அதாவது டிச.1 ஆம் தேதி விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

கோவை, அவிநாசி சாலையில் உள்ள சிஐடி கல்லூரி அருகில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அலங்கார வளைவில் மோதி, ரகு என்ற இளைஞர் உயிரிழந்தார்.