தமிழ்நாடு

பரிசலில் வாழை பறிக்கும் விவசாயிகள் - வெள்ளத்தால் நேர்ந்த துயரம்

பரிசலில் வாழை பறிக்கும் விவசாயிகள் - வெள்ளத்தால் நேர்ந்த துயரம்

webteam

மேட்டுப்பாளையம் அருகே பவானிசாகர் அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் கரையோரத்தில் பல லட்சம் வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கின. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பொதுப்பணித்துறையினரின் அனுமதியோடு பவானி சாகர் அணையின் நீர்த்தேக்கப் பகுதிகளில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்திருந்தனர். இந்த வாழை சாகுபடி சுமார் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட்டுள்ளது. இவை இன்னும் ஓரிரு வாரங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், பல லட்சம் வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கின. 

பருவமழை முன்கூட்டியே கொட்டித் தீர்த்ததால் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளதாக இப்பகுதி விவசாயிகள் கண் கலங்குகின்றனர். நீருக்கு வெளியே தெரிகின்ற வாழைத் தார்களையாவது வெட்டி எடுத்து தங்களது இழப்பை ஓரளவேனும் சமாளிக்கலாம் என பரிசல் மூலம் சென்று வாழைத்தார்களை பறிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், அரசு உரிய இழப்பீடு அளித்து வாழை விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்ற‌னர்.