வால்பாறையில் காட்டு யானைகள் தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்புகளை இடித்து சேதப்படுத்தியுள்ளன.
கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்புக்குள் 6 காட்டு யானைகள் புகுந்துள்ளன. அவை காந்தி, மூர்த்தி, கபீர் ஆகியோரின் வீட்டுச் சுவர்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளன. அத்துடன் சமையல் பாத்திரங்கள், டிவி, கட்டில் போன்ற பொருட்களை தள்ளி அட்டுழியத்திலும் ஈடுபட்டுள்ளன. பின்னர் அங்கிருந்த வாழை தோட்டத்தையும் சேதப்படுத்தியுள்ளன. இதனால் யானைகளை வனத்திற்குள் விரட்டவும், உரிய பாதுகாப்பு தடுப்பு வேலிகளை அமைக்கவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.