தமிழ்நாடு

வழிதவறி வந்த புள்ளிமான் : நாய்களிடம் சிக்கிய பரிதாபம்!

வழிதவறி வந்த புள்ளிமான் : நாய்களிடம் சிக்கிய பரிதாபம்!

webteam

ஆனைகட்டி அரசுப் பள்ளி அருகே வழிதவறி வந்த புள்ளி மானை நாய்கள் கடித்த போது பொதுமக்கள் மீட்டனர். 

கோவை மாவட்டத்தின் மேற்கு மலைத்தொடர்ச்சியை ஒட்டி இருக்கும் ஆனைகட்டி வனப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், கரடி, சிறுத்தை உள்ளிட்ட பல விலங்குகள் உயிர்வாழ்கின்றன. இவை அடிக்கடி ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் இரண்டரை வயதுடைய புள்ளிமான் ஒன்று. ஆனைகட்டி அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சுற்றுத்திரிந்தது. அதனை அங்கிருந்த நாய்கள் துரத்திக் கடித்ததால் மானின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. 

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் நாய்களிடம் இருந்து மானை மீட்டு, அருகிலுள்ள அரசு கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்றனர். சிகிச்சை முடிந்த பின்னர், மான் அடிபட்டதை வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வனத்துறையும் நீங்களே மானை வைத்திருங்கள், நாங்கள் வந்து வாங்கிக்கொள்கிறோம் என கூறி இதுவரை வராமல் இருக்கின்றனர். எனவே பொதுமக்களே அந்த மானை வைத்து பராமரித்து வருகின்றனர்.