தமிழ்நாடு

கோவையை மிரட்டும் கொரோனா: நேற்று ஒரே நாளில் 2 குழந்தைகள் உட்பட 26 பேருக்கு பாசிட்டிவ் !

webteam

(கோப்பு புகைப்படம்)

கொரோனா நோய் தொற்று உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல், ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

நேற்று மட்டும் தமிழகத்தில் 77 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 911 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக பார்த்தால் நேற்று கோவை மாவட்டத்தில் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 26 பேரில் 2 மற்றும் 3 வயது குழந்தைகள் அடக்கம். 14 வயது சிறுவன், 24 வயது இளைஞன், 22 பெண்கள் என 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 26 பேரும் டெல்லி நிகழ்வில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆவர்.

ஏற்கெனவே 60 பேர் சேர்த்து 86 பேர் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஒருவர் ரயில்வே ஊழியர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதவிர, ஊட்டியைச் சேர்ந்த 7 பேர், திருப்பூரைச் சேர்ந்த 25 பேர் என மொத்தம் 117 பேர் கோவை ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.