தமிழ்நாடு

கோவை மீன் சந்தையில் பட்டப் பகலில் நகைப் பறிப்பு - சிக்கிய சிசிடிவி

கோவை மீன் சந்தையில் பட்டப் பகலில் நகைப் பறிப்பு - சிக்கிய சிசிடிவி

webteam

கோவையில் சாலையில் நடந்துச்சென்ற பெண்ணிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

கோவை லாரி பேட்டை பின்புறம் மாநகராட்சியின் மீன் சந்தை செயல்பட்டு வருகிறது. அங்கு மீன் வாங்கி விற்பனை செய்வதற்காக ரஞ்சிதம் என்ற பெண் வந்துள்ளார். மீன்கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்த அவருக்கு முன் இளைஞர் ஒருவர் வந்துள்ளார். மிக இயல்பாய் வந்த அந்த இளைஞர், திடீரென ரஞ்சிதத்தின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துச்சென்றார். 

உடனடியாக ரஞ்சிதம் திருடன் குறித்து அலற, அருகிலிருந்தவர்கள் திருடனைப் பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த நபர் சிக்காமல் தப்பியோடினார். சந்தையில் பொருதப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து நகைப்பறிப்பில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

பட்டப்பகலில் நடந்து சென்றவாறே நகைப் பறிப்பில் இளைஞர் ஈடுபட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.