பாலியல் வன்கொடுமை வழக்கில் கோர்ட் உத்தரவு pt
தமிழ்நாடு

“பாலியல் வன்கொடுமைக்கு துணைபுரிவதும் குற்றம்தான்..” பெயரை நீக்க கோரியவருக்கு நீதிமன்றம் உத்தரவு!

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தான் முக்கிய குற்றவாளி இல்லை என்றும், குற்றத்திற்கு உதவியதை தவிர வேறெதுவும் செய்யவில்லை என்று பெயரை விடுவிக்க கோரியவருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

PT WEB

கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட ஒவ்வொருவரும் பாலியல் வன்கொடுமை செய்ததற்கான ஆதாரத்தை வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உதவி புரிந்தாலும் குற்றவாளிதான்..

கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒருவர், தான் பாலியல் வன்கொடுமைச் செயலில் ஈடுபடவில்லை என்றும் பாலியல் வன்கொடுமை செய்த முதன்மைக் குற்றவாளிக்கு உதவியது மட்டும்தான் தன்னுடைய குற்றம் என்றும் கூறினார். பாதிக்கப்பட்ட பெண் வன்கொடுமை செய்ததாக தன்னுடைய பெயரைக் குறிப்பிடாததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், “கூட்டுப் பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளில் குற்றம்சாட்டப்படும் அனைவருக்கும் பொதுவான நோக்கம் இருப்பதாகவே கருதப்படும். ஒரே ஒருவர் மட்டுமே பாலியல் வன்கொடுமையை நிகழ்த்தியிருந்தாலும் அதற்கு துணைபுரிந்த அனைவரும் பாலியல் வன்கொடுமைக்கான தண்டனையைப் பெற்றாக வேண்டும்” என்று கூறியுள்ளனர்.