அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி கோப்புப் படம்
தமிழ்நாடு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு!

webteam

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் 14ல் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி 3,000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறையினர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

minister senthil balaji

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி D.லிங்கேஸ்வரன் முன்பு புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலமாக அவர் ஆஜர்படுத்தபட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை அக்டோபர் 20 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 8வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனு அக்டோபர் 16ஆம் தேதி (திங்கட்கிழமை) விசாரணைக்கு வரவுள்ளது.