தமிழ்நாடு

டிடிவி தினகரன் ஆஜராக உத்தரவு

டிடிவி தினகரன் ஆஜராக உத்தரவு

Rasus

டி.டி.வி. தினகரன் ஏப்ரல் 10-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அன்னிய செலவாணி மோசடி வழக்கு விசாரணைக்காக டிடிவி தினகரன் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என முன்னதாக உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் தினகரன் இன்று ஆஜராகவில்லை.

டிடிவி தினகரன் ஆஜராகாமல் காலம் தாழ்த்துவதற்கு நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார். மேலும் வரும் 10-ஆம் தேதி அதாவது திங்கட்கிழமை கண்டிப்பாக டிடிவி தினகரன் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி மலர்மதி உத்தரவிட்டார்.