ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலை சிறையில் அடைக்க சென்னை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலை உடனே சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டுமில்லாமல், சரணடைவதில் இருந்து விலக்கு கோரிய ராஜகோபாலின் கோரிக்கை மனுவையும் நிராகரித்தது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி ராஜகோபால் இன்று சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார். தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் நீதிமன்றத்திற்கு வந்து, ராஜகோபால் ஆஜரானார். அப்போது, ஆம்புலன்ஸில் இருந்து சிகிச்சை பெற்று வருவதால், சரண்டரை பதிவு செய்ய வேண்டும் என ராஜகோபலால் தரப்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து ராஜகோபாலை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக ராஜகேபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம் அவர் ஜூலை 7-ஆம் தேதிக்குள் சரணடைய உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.