தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக தமிழ் அறிஞர்கள், ஆன்மீக ஆர்வலர்களை கொண்ட குழுவை அமைக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு உத்தரவிட்டுள்ளது.
கரூரைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழ் சைவ ஆகம விதிகளின்படி தேவாரம், திருவாசகம் போன்றவை வாசித்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ள உயர் நீதிமன்ற கிளை, உலகிலுள்ள மொழிகளிலேயே தமிழ்மொழி தான் தொன்மையான மொழி என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என கருத்து தெரிவித்தனர்.