தமிழ்நாடு

’அட்டாக்’ பாண்டி ஜாமின் மனு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு

’அட்டாக்’ பாண்டி ஜாமின் மனு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு

webteam

அட்டாக் பாண்டி ஜாமீன் மனு தொடர்பாக இரண்டு வாரத்தில் பதிலளிக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ‌

தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்தவர் 'பொட்டு' சுரேஷ். மதுரையை சேர்ந்த இவர், 2013 ஆம் ஆண்டு ஜன.,31ம் தேதி மதுரையில் வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த, மதுரை வேளாண் விற்பனைக் குழு முன்னாள் தலைவர் 'அட்டாக்' பாண்டி 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இவரது ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மூன்றுமுறை தள்ளுபடி செய்தது. தற்போது நான்காவது முறையாக ஜாமின் கேட்டு மனு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, ஜாமின் மனு தொடர்பாக இரண்டு வாரத்தில் பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டது.