வறுமை காரணமாக சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.
சென்னையை அடுத்த குரோம்பேட்டை அருகே உள்ள ஜமீன் இராயபேட்டை போஸ்டர் நகர் வரலட்சுமி தெருவில் ராஜேஷ்- சரஸ்வதி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன், 8 வயதில் ஒரு மகன் உள்ளனர்.
தம்பதிகள் இருவரும் தள்ளுவண்டியில் டிபன் கடை வைத்து நடத்தி வந்தனர். இந்நிலையில் அவர்கள் திடீரென்று இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த தகவலை அறிந்த சிட்லபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தம்பதியினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
வறுமையின் காரணமாக தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்போது அவர்களது இரண்டு மகன்களும் பெற்றோரை இழந்து நிர்க்கதியாய் நிற்கின்றனர்.