விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வ.புதுப்பட்டி இந்திரா காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வெடி சத்தம் கேட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் குறிப்பிட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் தங்கேஸ்வரன் என்ற வாலிபர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது எதிர்பாராத விதமாக வெடித்ததாக கூறப்படுகிறது. ஆனால் நாட்டு வெடிகுண்டு தயாரித்த தங்கேஸ்வரன் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பியுள்ளார்.
இதைத்தொடர்ந்து நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட டப்பா மற்றும் மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்து தங்கேஸ்வரனை கைது செய்தனர்.