மதுரை அருகே வார்டு கவுன்சிலர் ஒருவர் பதவியேற்றவுடன் சுவர் ஏறி குதித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கான பதவியேற்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. அதன்படி மதுரை மாவட்டத்திலும் கவுன்சிலர்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது.
இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய 8-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, பொறியியல் பட்டதாரி இளைஞர் அரவிந்த் என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து இன்று அவர் பதவியேற்றவுடன் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினார். சுயேச்சை கவுன்சிலரின் ஆதரவை பெற கட்சிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், அவர் பதவியேற்ற உடனேயே தப்பியோடியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.