காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஷ்வரத்தில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்களை பணத்திற்காக விற்பனை செய்வதாக புகார் எழுந்த நிலையில், அந்த இல்லத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஷ்வரம் செயிண்ட் ஜோசப் ஆதரவற்றோர் இல்லத்தில் மாதந்தோறும் 40 முதல் 50 பேர் வரை மர்மமான முறையில் மரணமடைவதாகப் புகார் எழுந்தது. அதனடிப்படையில் கோட்டாட்சியர் ராஜூ தலைமையில் சமூக நலம், சுகாதாரம், காவல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் 80-க்கும் மேற்பட்டோர் அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஜனவரியில் மட்டும் அந்த இல்லத்தில் 60 பேர் உயிரிழந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. ஆதரவற்றோர் இல்லத்தில் இறப்பவர்களின் விவரங்கள் குறித்து முறையான தகவலை நிர்வாகம் தருவதில்லை எனவும், ஆதரவற்றவர்களைக் கொன்று உடலுறுப்பு, எலும்புகளைக் கடத்துவதாக எழுந்த புகாரின் பேரில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.