நாமக்கல் அருகே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவர் சென்றதையடுத்து வங்கி மற்றும் ஏடிஎம் தற்காலிகமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி பாரத ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கிளைக்கு சென்றது தெரியவந்துள்ளது.
இதனால் இந்த வங்கி கிளை மற்றும் ஏடிஎம் தற்காலிகமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனைகளை தொடர மோகனூர் மற்றும் திருச்செங்கோடு வங்கி கிளைகளை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.