தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 லிருந்து 15 ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக கொரோனாவுக்கு தமிழகத்தில் 12 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் “ சென்னையில் மேலும் மூன்று நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மூவருமே வெளிநாடு சென்று திரும்பியவர்கள்தான். இருவர் அமெரிக்காவில் இருந்து திரும்பியவர்கள். ஒருவர் சுவிட்சர்லாந்தில் இருந்து திரும்பியவர். மூவருக்குமே மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.