சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 676 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
தமிழகத்தில் நேற்று 669 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மாநிலத்திலேயே சென்னையில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 3,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மண்டலவாரியாக சென்னையில் ஏற்பட்டுள்ள கொரோனா எண்ணிக்கையை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 676 பேரும், அடுத்தப்படியாக கோடம்பாக்கத்தில் 630 பேரும், திருவிக நகரில் 556 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.