தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா: பாதிப்பு 738 ஆக உயர்வு

rajakannan

தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதியானதாக சுகாதாரத்துறை செயலர் பீலா செயலர் கூறியுள்ளார்.

இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 48 பேரில் 42 பேர் டெல்லி சென்று வந்தவர்கள் என்று பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690இல் இருந்து 738 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், “21 பேர் வீடு திரும்பி இருக்கிறார்கள், 72 வயது முதியவர் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார். 8 பேர் இதுவரை உயிரிழந்து இருக்கிறார்கள்.” என்று அவர் தெரிவித்தார்.